சாலை விபத்துகளை தடுக்க உலகம் முழுவதும் போலீசார் பல்வேறு வகையான யுக்திகள், சட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்தி வருகின்றனர்.
ஆனால் தெலுங்கானா போலீசார் வேறு வகையாக ஆலோசித்து புது யுக்தியை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்துக்களை தடுக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதன்படி தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்ட போலீசார் 3டி அனிமேஷன் முறையில் பிளைவுட்டில் தயார் செய்யப்பட்ட போக்குவரத்து போலீஸ் வாகனம், போலீஸ் கான்ஸ்டபிள் ஆகியவற்றை அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படும் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.
சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போது உண்மையாகவே போலீஸ் கான்ஸ்டபிள் காருடன் நின்று கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை பார்க்கும் வாகன ஓட்டிகள் தங்களுடைய தவறுகளை வேக வேகமாக சரி செய்து கொண்டு வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
இதனால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படும் அந்த பகுதிகளில் விபத்துக்களை தடுக்க முடியும் என்பது தெலுங்கானா போலீசாரின் நம்பிக்கை.