2 வது திருமணம் செய்த கணவன் – கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மனைவ!

பாட்ஷா படத்தில் ரஜினியை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சியை, நாம் அனைவரும் பார்த்திருப்போம். அந்த காட்சியை மீண்டும் நம் கண்முன் நிறுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நடைபெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கும், ஸ்ரீகாந்த் என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், 4 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

சமீபத்தில், மனைவியை விட்ட பிரிந்த ஸ்ரீகாந்த், வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அகிலா, ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு சென்று, அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர், மின் கம்பத்தில் கட்டி வைத்து, ஸ்ரீகாந்தை அடித்து துவைத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஸ்ரீகாந்த்தை மீட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.