வாரிசு இசை வெளியீட்டில் பங்கேற்கும் தெலுங்கு பிரபலம்..?

விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் வாரிசு. பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின், இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனி அன்று, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு திரை பிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.