அஜித் படத்துக்கு மொட்டை போட்ட தெலுங்கு பிரபலம்..! வைரலாகும் புகைப்படம்..!

கடந்த 2015-ஆம் ஆண்டு, அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக மாபெரும் ஹிட் அடித்த இப்படத்தில், அஜித் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இதில், தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் வேதாளம் என்ற கேரக்டருக்காக அஜித் மொட்டை அடித்திருப்பார். தற்போது அதே போன்று சிரஞ்சீவியும் மொட்டை அடித்துள்ள புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பெரிய ஸ்டார்கள், இதுபோன்று மொட்டை அடித்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள், ஆனால் சிரஞ்சீவி தனது ரசிகர்களுக்காக மொட்டை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News