சாகுந்தலம் படத்தின் தோல்வியால், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டிபாபு, நடிகை சமந்தாவை கடுமையாக விமர்சித்து வந்தார்.
“நாயகி அந்தஸ்தை சமந்தா இழந்துவிட்டார்.. உடல்நலத்தை காரணம் காட்டி, போலியான விளம்பத்தை செய்து வருகிறார்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி தந்த சமந்தா, தயாரிப்பாளரை உருவ கேலி செய்திருந்தார்.
இதனால் செம கடுப்பான தயாரிப்பாளர் சிட்டிபாபு, “நான் வாயை திறந்தால், சமந்தாவின் மானம் போய்விடும்” என்று தெரிவித்துள்ளார். சிட்டிபாபுவின் கருத்துக்கு சமந்தா பதிலளிப்பாரா இல்லையா என்பதை இனி தான் பார்க்க வேண்டும்.