தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலினுடன் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முதலீடுகளை ஈா்க்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சாா்பில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளா் மாநாட்டில் கலந்து கொள்வதற்க்காக அரசுமுறை பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் பயணித்த அதே விமானத்தில் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சும் பயணித்துள்ளார். அப்போது இருவரும் சந்தித்து கொண்ட நிலையில் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘ஆகாயத்தில் ஆச்சரியம்’ எனப் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த இந்த புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
