Connect with us

Raj News Tamil

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியா

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

டெல்லியில் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிந்தனர்.

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் மருத்துவமனையில் உள்ள 12 குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஆறு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மீதமுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top