ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா அணி முதலில் பேட் செய்தது.
ஜெய்ஸ்வால் 53, ருதுராஜ் 58, இஷான் கிஷன் 52, ரிங்கு சிங் 31, ஆகியோர் அதிரடியில் மிரட்ட, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது.
236 ரன்கள் என்ற பிரம்மாண்ட வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 58-4 என்ற நிலையில் தடுமாறியது. இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்திய அணி பெறும் இரண்டாவது வெற்றி ஆகும். இந்திய அணி தரப்பில், பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.