Connect with us

Raj News Tamil

பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

இந்தியா

பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் புஃப்லியாஸ் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலில் பேரில் ராணுவ வீரர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

தேடுதல் வேட்டையில் போது ராணுவ வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்த வீரர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். இதனால், வீரமரணமடைந்த வீரர்களில் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

More in இந்தியா

To Top