பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (நவ.9) காலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திற்கு முன்பாக அங்கிருந்து ரயில் ஒன்று புறப்பட்டதாகவும், அந்த ரயில் புறப்படுவதற்கு முன்பாக இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு, தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலம் என்று சந்தேகிக்கின்றனர்.