காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக, சந்தேகிக்கப்படும் 4 தீவிரவாதிகளின் புகைப்படத்தை, பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர்.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தளமான பஹல்காம் பகுதியில், நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 28 பேர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு, லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான TRF பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 தீவிரவாதிகளின் புகைப்படத்தை, பாதுகாப்புப் படையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வழங்கிய அடையாளங்களை வைத்து, தீவிரவாதிகளின் ஓவியங்களை, பாதுகாப்புப் படையினர் வெளியிட்டிருந்தனர்.