சர்ப்பரைஸ்-ஆக சீனாவுக்கு விசிட் அடித்த எலன் மஸ்க்! காரணம் என்ன?

டெஸ்ல, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் ( தற்போதைய எக்ஸ் ) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருபவர் எலன் மஸ்க்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இவர், இந்தியாவிற்கு வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும், இந்திய சந்தையில் களமிறங்குவதற்கான சில திட்டங்களை அவர் அறிவிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ஒருசில பிரச்சனைகளின் காரணமாக, பிரதமர் உடனான சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் உலகின் இரண்டாவது பெரிய நாடான சீனாவுக்கு, இன்று எலன் மஸ்க் சர்ப்பரைஸாக சென்றுள்ளார். வாகனங்களை தானியங்கி மூலம் இயக்குவதற்கான சாப்ட்வேர்களை அறிமுகப்படுத்துவதற்காக, சீனாவின் தலைநகரான பீஜிங் பகுதிக்கு அவர் சென்றுள்ளளாராம்.

மேலும், அப்பகுதி அதிகாரிகளை சந்திக்க அவர் கோரியுள்ளதாகவும், நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

இதற்கிடையே, எக்ஸ் பக்கத்தில், நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “தானியங்கி முறையில் வாகனங்களை இயக்கும் வசதியை, டெஸ்லா நிறுவனம், சீனாவில் மிக விரைவில் கொண்டு வரும்” என்று எலன் மஸ்க் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News