சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மூன்றுக்கும் மேற்பட்ட சிக்னகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை சரிசெய்ய மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி பட்ஜெட்டில் புதிய பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உயர் மட்ட பாலம் அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.