தாய்லாந்து நாட்டில் உள்ள மஹா சர்காம் என்ற மாகாணத்தை சேர்ந்தவர் பூண்டோம் சாய்மூன். 55 வயதான இவருக்கு, அம்னாய் சாய்மூன் என்ற மனைவி உள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறையை ஜாலியாக கழிக்க நினைத்த இரண்டு பேரும், காரில் லாங் டிரைவ் சென்றுள்ளனர்.
அப்போது, பூண்டோம் சாய்மூனுக்கு இயற்கை உபாதை வந்ததால், காரை ஓரமாக நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் காரில் இருந்து வெளியே வந்த பூண்டோமின் மனைவி, இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். திடீரென அவருக்கும் இயற்கை உபாதை ஏற்பட்டதால், அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது, காரை எடுத்துக் கொண்டு கணவர் சென்றுவிட்டாராம். தனது செல்போனையும் காரில் வைத்துவிட்டதால், உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல், அந்த பெண் தவித்துள்ளார். இறுதியில், 20 கி.மீ நடந்தே சென்று, அருகில் இருந்த கிராமத்தில், காவலர்களின் உதவியை அந்த பெண் நாடியுள்ளார்.
பின்னர், அவர்கள் பூண்டோமை தொடர்புகொண்டு, மனைவியை விட்டுச் சென்றது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு சிம்பிளாக பதில் அளித்த அவர், Sorry Sir மறந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளாராம்.