“நான் வந்துட்டேன்னு சொல்லு” – அதிரடி காட்டிய தல தோனி!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகவும் விருப்பமான கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று ஐ.பி.எல். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் இந்த போட்டி, ஏப்ரல் மாதம் முடிவடைவது வழக்கம். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான போட்டி, வரும் மார்ச் 31-ஆம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது.

முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளனர். இதன்காரணமாக, இருதரப்பு அணியின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, வரவுள்ள போட்டிக்காக, சிதம்பரம் மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறார்.

அப்போது, அவர் அடித்த சிக்ஸ், அங்கிருந்த பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களையும் குஷியாக்கியுள்ளது. “மனுஷன் பழைய ஃபார்முக்கு வந்துட்டாரு.. இனி பழைய தோனிய பாப்பீங்க” என்று பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.