நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில், ரஜினி நடிக்க உள்ளார். அதன்பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் காரணமாக, இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, டி.ஜே.ஞானவேலின் படத்தை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் ஹாசன் தான் தயாரிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு, ரஜினியும், கமலும் ஒரு படத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல், அவர்களது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படம், லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் இடம்பெறுமா என்று கேள்வியும், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.