Connect with us

Raj News Tamil

“இது என்னுடைய படம் தான்” – அடித்து சொன்ன லோகி!

சினிமா

“இது என்னுடைய படம் தான்” – அடித்து சொன்ன லோகி!

மாநகரம், கைதி, விக்ரம் என்று பல்வேறு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து, புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங், வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, இப்படத்தின் டைட்டில் டீசர், வரும் 22-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்றும், படக்குழுவினர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.

அதில், இந்த படத்தில் ரஜினிகாந்தை வித்தியாசமான முறையில் காட்ட உள்ளோம். அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இது 100 சதவீதம் என்னுடைய படம் தான் என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top