லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம், ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ், அடுத்த இயக்க உள்ள தலைவர் 171 படமும், ஆங்கில படம் ஒன்றின், தழுவல் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தி ஐரிஷ் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் தான், தலைவர் 171 திரைப்படமாம்.
ஆனால், இதில் சில மாற்றங்களை செய்து, தன்னுடைய ஸ்டைலில் அவர் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.