சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள், வரும் டிசம்பர் 12-ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, ரசிகர்களுக்கு 3 சர்ப்பரைஸ்கள் காத்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, டிசம்பர் 12-ஆம் தேதி அன்று, தளபதி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. மேலும், ஜெயிலர் 2 திரைப்படம் தொடர்பான அப்டேட், அதே நாளில் வெளியாக உள்ளதாம்.
இதுமட்டுமின்றி, ரஜினியின் 173-வது படத்தின் அப்டேட்டும், அவரது பிறந்த நாள் அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 173-வது படத்தை, மணிரத்னம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.