பலகோடிகளை அள்ளிய தளபதி 67!

வாரிசு படத்தை காட்டிலும், தளபதி 67 படத்தை காண்பதற்கு தான், விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படத்தில், விஜய் 50 வயதுடைய தாதா வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளதால், எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.

இவ்வாறு இருக்க, தளபதி 67 திரைப்படம், ரிலீசுக்கு முன்னரே, 240 கோடி ரூபாய் வியாபாரம் செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஓடிடி வெளியீட்டு உரிமை 160 கோடி ரூபாய்க்கு, நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 80 கோடி ரூபாய்க்கு, சேட்டிலைட் உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆக மொத்தம் 240 கோடி ரூபாயை, ரிலீசுக்கு முன்னரே இந்த திரைப்படம் வசூலித்துள்ளது.