தளபதி 67 புதிய அப்டேட்! சுட்ட வடையை மீண்டும் சுடும் லோகி!

வாரிசு படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் உடன், தளபதி விஜய் இணைய இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கப்பட்டுள்ள இந்த படம், படப்பிடிப்புக்கு முன்னரே 240 கோடி ரூபாய் வியாபாரம் செய்துள்ளது.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்ற வெளியாகியுள்ளது. அதாவது, டிசம்பர் 5-ஆம் தேதி அன்று, இந்த படத்தின் பூஜை நடக்க உள்ளதாம்.

மேலும், விக்ரம் படத்திற்கு செய்ததைப் போல, இந்த படத்திற்கும் டைட்டில் டீசரை உருவாக்க, லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளாராம்.