சினிமா
மீண்டும் மோதிக் கொள்ளும் விஜய் – அஜித்! செம அப்டேட்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில், விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்க உள்ள புதிய திரைப்படத்தில், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோர் முதல் வாரத்தில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் விடாமுயற்சி படமும், இதே நாட்களில் தான் தொடங்கப்படுவதால், இரண்டு படங்களும் மோதிக் கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு, விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும், ஒரே நேரத்தில் ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.
