வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில், தளபதி 68 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் விஜயை இளமையாக காட்டுவதற்கு, டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஆங்கில மொழியில் வெளியான ஜெமினி படத்தின் தழுவலாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
வில் ஸ்மித் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம், தோல்வி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.