வாரிசு திரைப்படமும், துணிவு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகி, கடந்த பொங்கல் பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியானது.
இதில், துணிவு திரைப்படம் தான், ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தளபதி விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.
அந்த படத்தின் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருந்து வருகிறது. படமும் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது, தனது 68-வது படத்தின் பணிகளில் விஜய் பிசியாக உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி அன்று, புஜையுடன் நடக்க உள்ளதாம். இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள், லியோ படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்தின் ஷீட்டிங்கிற்கே விஜய் சென்றுவிட்டார்..
ஆனால், இன்னும் தனது விடாமுயற்சி படத்தின் ஷீட்டிங்கையே அஜித் தொடங்கவில்லை என்று கூறி, கலாய்த்து வருகின்றனர்.