ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படம், பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் என்ன என்பது தொடர்பான தகவல், இணையத்தில் லீக்காகியுள்ளது. அதாவது, தளபதி 68 படத்திற்காக, 3 டைட்டில்களை, படக்குழுவினர் தேர்வு செய்து வைத்திருந்தார்களாம்.
இந்த 3-ல் ஒரு டைட்டிலை, வரும் புத்தாண்டு தினத்தன்று, அறிவிக்க, படக்குழுவினா முடிவு செய்திருந்தார்கள். ஆனால், அந்த 3 டைட்டில்களில், ஒன்று, தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
அது என்னவென்றால், ‘பாஸ்’. இதனை அறிந்த நெட்டிசன்கள்;, டைட்டில் சுமாராக உள்ளது என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
‘நாங்கள் இன்னும் நல்ல டைட்டில்கள் வைக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இந்த டைட்டில் சுமாராக தான் உள்ளது’ என்று கமெண்ட்ஸ் கூறி வருகிறார்கள்.