நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், 2 வார கால இடைவேளைக்கு பின் 2 கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சென்னையில் கடந்த 2-ந் தேதி லியோ பட வெற்றி விழா முடிந்ததும் நடிகர் விஜய் 2-ம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த 3-ந் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு புறப்பட்டு சென்றார்.
தாய்லாந்தில் 10 நாட்கள் நடைபெற்ற சூட்டிங்கில் கலந்து கொண்டு விட்டு நள்ளிரவு விமான மூலம் சென்னை திரும்பினார்.
இதற்கிடையே விமான நிலையத்தில் நடிகர் விஜயை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.