தளபதி 69 படத்தின் தலைப்பு இதுதான்!

தி கோட் படத்திற்கு பிறகு, எச்.வினோத் இயக்கும் படத்தில், விஜய் நடித்து வருகிறார். அவரோடு சேர்ந்து, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

மேலும், அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை, கே.வி.என். புரொடக்ஷன் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில், குடிரயசு தினத்தை முன்னிட்டு, இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில், படத்திற்கு ஜனநாயகன் என்ற பெயர் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. மேலும், எக்ஸ் பக்கத்திலும், ஜனநாயகன் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News