வாரிசு படத்திற்கு பிறகு, லியோ படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.
இதன் தாக்கமே இன்னும் முடியாத நிலையில், தளபதி 68 மற்றும் 69 ஆகிய படங்களின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 68 படத்தை இயக்குநர் அட்லி இயக்க இருப்பதாகவும், தளபதி 69 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும், தகவல் கசிந்துள்ளது.
இதில், இயக்குநர் ஷங்கர் விஜயுடன் கூட்டணி வைத்திருப்பது, அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. இதன்காரணமாக, லியோ படத்தை காட்டிலும், இந்த படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.