தி கோட் படத்திற்கு பிறகு, விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 69. எச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை, பலகோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தளபதி 69 படத்தின் வெளிநாட்டு உரிமையை, 75 கோடி ரூபாய்க்கு, துபாயை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பே இன்னும் முடியாமல் இருக்கும்போது, பலகோடி ரூபாய்-க்கு, வெளிநாட்டு உரிமை விற்பனை ஆகியிருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.