Connect with us

Raj News Tamil

உலக அளவில் 3-ஆம் இடத்தில் விஜய்!

சினிமா

உலக அளவில் 3-ஆம் இடத்தில் விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷீட்டிங் காஷ்மீரில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். முதல் பதிவாக, “ஹோலோ நண்பா நண்பீஸ்” என்று குறிப்பிட்டு, தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வெளியான 24 மணி நேரத்தில், 4 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி, கணக்கு தொடங்கிய குறைவான நேரத்திற்குள், ஒரு மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற பிரபலங்களில், விஜய் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

அதாவது, தளபதி விஜய் கணக்கு தொடங்கிய 99 நிமிடத்தில், 1 மில்லியன் ஃபாலோவர்களை பெற்று, உலக சாதனை படைத்துள்ளார். கொரியன் இசைக்குழுவான பி.டி.எஸ்-ல் உள்ள வி என்று அழைக்கப்படும் நபர், 43 நிமிடத்திலும், ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடத்திலும் ஒரு மில்லியன் ஃபாலோவர்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top