வனிதாவின் மகனுடன் விளையாடும் தளபதி விஜய்!

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, விஜயின் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்னர், திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட அவருக்கு, பல்வேறு சோதனைகள் வரவே, தன் குழந்தைகள் மட்டும் போதும் என்று வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பு, வனிதாவின் வீட்டிற்கு, தனது மனைவியுடன் விஜய் சென்றுள்ளார். அப்போது, வனிதாவின் மகன் ஹரியுடன், விஜய் விளையாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி, இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.