Connect with us

Raj News Tamil

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்?

சினிமா

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்?

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். கோலார் தங்க சுரங்கத்தில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாக வைத்து, இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், சில பிரச்சனைகளின் காரணமாக, தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி தொடர்பான புதிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று, இப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top