விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம், கடந்த 15-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
ஆரம்பத்தில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், வசூலில் மட்டும் நல்ல லாபத்தை பெற்று வந்தது. மேலும், 2 நாட்களில் மட்டுமே உலக அளவில் 35 கோடி ரூபாயை வசூலித்திருந்தது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், 3 நாட்கள் வசூல் நிலவரம் என்னவென்று, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, 40 கோடி ரூபாயை, 3 நாட்களில் வசூலித்துள்ளதாம்.
2 நாட்களிலேயே 35 கோடியை வசூலித்த இந்த திரைப்படம், 3-வது நாளில் மட்டும் வெறும் 5 கோடியை தான் வசூலித்துள்ளது. வேகமாக அதிகரித்து வந்த வசூல், தற்போது குறைந்திருப்பது, படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.