Connect with us

Raj News Tamil

தங்கலான் படத்தின் அதிரடி அறிவிப்பு! சத்தமே இல்லாமல் புயல் போல் வேலை பார்க்கும் பா.ரஞ்சித்!

சினிமா

தங்கலான் படத்தின் அதிரடி அறிவிப்பு! சத்தமே இல்லாமல் புயல் போல் வேலை பார்க்கும் பா.ரஞ்சித்!

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு, தங்கலான் என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில், விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

கோலார் தங்க வயலை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி வருவதால், படத்தின் மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்த படமாவது விக்ரமுக்கு வெற்றி அடையுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து கிடக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, கோலார் தங்க வயல் தொடர்பான காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிதமாக திட்டமிட்டு, சைலண்டாக மிகப்பெரிய படத்தை அவர் எடுத்துவிட்டதாக, கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top