சார்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் படம் தங்கலான்.
விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரில், ரத்தம் தெறிக்கும்படியான காட்சிகள் பல உள்ளது.
மேலும், படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள வி.எப்.எக்ஸ் காட்சிகளும், மிகவும் தத்ரூபமாக உருவாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்களும், உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், இந்த படமாவது, விக்ரமுக்கு நல்ல கம்பேக்காக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தி வருகின்றனர்.