வித்தியாசமான திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள விக்ரம், தற்போது தங்கலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கே.ஜி.எப் பகுதியில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப பணிகள் முடியாத காரணத்தால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
அதன்பிறகு, நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, தேர்தல் நடக்கும் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதால், படக்குழுவினர் படத்தின் ரிலீஸில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்களாம்.
அநேகமாக, இப்படம், வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.