கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை. மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. கனமழை பெய்யும் என எச்சரித்த பின்னர் எடுக்கபட்ட நடவடிக்கை என்ன?. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை மையம் மீது குற்றம் சாட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது : தமிழக மக்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தியுள்ளார். முதலமைச்சர் கேட்ட நிதியை அவர் தரவில்லை. ஒரே நாடு, ஒரே தேசம் என்பதில் அக்கறை இருந்தால் தமிழக பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என அவர் கூறினார்.
மணிப்பூர் பற்றி எரிந்த போது எங்கிருந்தீர்கள்?
தொடர்ந்து பேசிய அவர் மணிப்பூர் பற்றி எரிந்த போது மத்திய அமைச்சர்கள் ஒருமுறையாவது அங்கு சென்றார்களா? மத்திய நிதி அமைச்சர் புயல் பாதிப்பை பார்வையிட ஒருமுறையாவது சென்னை வந்தாரா? கேள்வி எழுப்பினார்.