விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் ஒரு பக்கம் கொடுத்தாலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், மற்றும் முண்னனி நட்சத்திரங்கள் பலா் நடித்துள்ளனா்.லியோ ஆயிரம் கோடிகளை தாண்டுமா என்று பல்வேறு விமா்சனங்கள், கேள்விகளும் வலம் வரும் நிலையில்,வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன் தயாாிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வசூல் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில் நெருப்பு ஆதரங்களான பாக்ஸ் ஆபிஸ் பதிவுகள் உங்களால் எதுவும் செய்ய முடியாது வெறும் 12 நாட்களில் 540 கோடிகள் மேல் மொத்த வசூல் செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளனா். வசூல் குறித்த சாியான அப்டேட் வெளிவந்துள்ளளதால் இதனை விஜய் ரசிகா்கள் ஷோ் செய்து
கொண்டாடிவருகின்றனா்.