முடிவடைந்த 2 வது நாள் ஆலோசனைக்கூட்டம் ! பதிலளித்த புஸ்ஸி ஆனந்த்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து, நேற்று,விஜய் ,விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை பனையூர் இல்லத்தில் சந்தித்தார்,மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில். இரண்டாவது நாளான கூட்டம் இன்று முடிவடைந்தது. இதில்,10-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்த நிலையில் , விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார் . அவர் கூறியதாவது ,விஜய் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்தார் மற்றும் அவர்களது குடும்பத்தை பார்த்துக் கொள்ள கூறினார். இலவச பாடசாலை குறித்து விஜய்யிடம் அனுமதி பெற்றபின் முறையான அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.

RELATED ARTICLES

Recent News