5-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாட்டில் 18-ஆவது மக்களவையை தேர்தல் ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25,ஜூன் 1) நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நான்கு கட்ட வாக்கு பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து, 5-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
அதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதி என மொத்தம் 49 தொகுதிகளில் இன்று காலை 7 முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.