தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதையடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது மூன்றாவது என ஆறு சீசன்கள் முடிவடைந்தது.கடந்த ஆண்டு ஆறாவது சீசன் டைட்டிலை அஷீம் தட்டிச்சென்றார். இதுவரை நடந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
எனவே, ‘பிக்பாஸ்’ 7-வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 7 விரைவில் வெளியாகும் என கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் டீசர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் பரவசத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.