375 ஆண்டுகள் மறைந்திருந்த 8 வது கண்டம்! சிக்கிய ஜீலந்தியா தீவு!

உலகில் ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 கண்டங்கள் உள்ளனஆனால் ,தற்போது உலகின் 8-வது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இக்கண்டத்திற்கு விஞ்ஞானிகள் ஜீலந்தியா என்று பெயரிட்டுள்ளனர். கடல் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டு பிடித்துள்ளனர்.

இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. மொத்தம் 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளதாக் தெரிகிறது. இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளனர்.

இது எப்போது நீருக்கடியில் சென்றது? என்பது குறித்த ஆய்வில் அறிவியலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கண்டமானது விரைவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உலகின் 8-வது கண்டமாக அறிவிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் தமிழகத்தில் இந்திய பெருங்கடலில் லெமூரியா கண்டம் கடலுக்குள் மூழ்கி இருப்பதாகவும், தமிழர்கள் இங்குதான் தோன்றினர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். லெமுரியா கண்டத்தை தொடர்ந்து இது9 வது கண்டமா என்று அறிவியலாளர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News