90-வது பொதுச்சபை கூட்டம், டெல்லியில் தொடக்கம்!

சர்வதேச காவல்துறையின் 90-வது பொதுச்சபை கூட்டம், டெல்லியில் இன்று தொடங்குகிறது. சர்வதேச காவல்துறையின் பொதுச் செயலாளர் ஜுர்கன் ஸ்டாக் தலைமையில் நடக்கும் இந்த கூட்டம், வருகிற 21-ம் தேதியுடன் முடிவடைகிறது.

25 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 195 உறுப்பு நாடுகளை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச பயங்கரவாதம், சர்வதேச குற்றவாளிகளை கண்காணிப்பது, இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும், சர்வதேச குற்றங்களை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

கூட்டத்தின் முதல் நாளான இன்று கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, இந்தியாவின் சட்டம் – ஒழுங்கின் சிறந்த நடைமுறைகள் குறித்து சிறப்புரையாற்றுகிறார்.
சர்வதேச காவல்துறையின் தலைவர் அகமது நாசர் அல்ரசி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர், இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.