கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபத்து..!

தாம்பரம் அருகே மினிவேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஐந்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!

தாம்பரம் அடுத்த கரசங்கால் அருகே தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், ஷிரிஸ்திகா என்ற மாணவி பயின்று வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த மினிவேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி மாணவி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவியை அருகே இருந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News