வணங்கான் ஷூட்டிங்கில் நடிகை கன்னம் பழுக்க தாக்குதல்..! என்ன நடந்தது..?

இயக்குனர் பாலா தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால், இதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னியாகுமாரில் நடந்துவரும் இந்த படப்பிடிப்பில், கேரளவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இவர்களின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறப்படும் ஜிதின் என்பவர், 3 -நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்பட்கிறது. இதனை லிண்டா என்ற நடிகை ஜிதினிடம் கேட்டபோது ஆத்திரமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதில் கன்னம் பழுக்க முகம் வீங்கியுள்ளது. தற்போது காயமடைந்த லிண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News