இஸ்ரேலுக்கு துணை நிற்கும் அமெரிக்க: நன்றி தெரிவித்த இஸ்ரேல் அதிபர்!

இஸ்ரேல் மக்களுக்கு என்றும் துணை நிற்போம் என உறுதியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியதாவது: ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட ஹமாஸ் மிகவும் மோசமானது. கடந்த 7ம் தேதி ஹமாஸ் அமைப்பு 1,400 இஸ்ரேல் மக்களை கொன்றுள்ளது. குழந்தைகளைக் கூட ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர்.

இந்த கடினமான சூழலில் இஸ்ரேலுக்கு வருகை தந்து தனது ஆதரவை தெரிவித்ததோடு இஸ்ரேல் மக்களுக்கு என்றும் துணை நிற்போம் என உறுதியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தேன்.

ஹமாஸை வீழ்த்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். இது ஒரு வித்தியாசமான போராக இருக்கும். பொதுமக்கள் பலியாவதற்கு ஹமாஸ் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் போரை நாம் தொடரும்போது, பொதுமக்களை தீங்கு விளைவிக்காமல் இருக்க இஸ்ரேல் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.

அவர்களை (பொதுமக்கள்) பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இஸ்ரேலிய மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து ஹாமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும். வெற்றிக்கான பாதை நீண்டதாகவும் கடினமாகவும் இருக்கும். நமது வீரர்கள் ஒன்றுபட்டால் இஸ்ரேல் பலம் மேலோங்கும், இவ்வாறு அவர் பேசினார்.

RELATED ARTICLES

Recent News