வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னைக்கு 230 கி.மீ. தொலைவில் கிழக்கு – தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
மிக்ஜம் புயல் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் வேகமெடுத்து நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழ்நாடு, ஆந்திர கடற்கரையை நெருங்கும்.
தீவிர புயலாக கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.