Connect with us

Raj News Tamil

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அரசியல்

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“நீட் தேர்வின் பலன் என்ன என்றால் பூஜ்ஜியம் தான் என்பதை மத்திய பா.ஜ.க. அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ட்விட்டர்(எக்ஸ்) செய்தி:

“நீட் தேர்வின் பலன் என்ன என்றால் பூஜ்ஜியம் தான் என்பதை மத்திய பா.ஜ.க. அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் தான் என்று வரையறுப்பதன் மூலமாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பதில் உள்ள தகுதிக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது.

நீட் என்றால் பூஜ்ஜியம் என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

நீட் என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும்.

More in அரசியல்

To Top