கிணற்றில் குதித்து புதுமணப்பெண் தற்கொலை….காப்பாற்ற குதித்த கணவனும் பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 27) என்பவருக்கும் அபிராமி (19) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த அபிராமி அருகில் இருந்த 100 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார். இதில் அபிராமி தலையில் பலத்த காயமடைந்து கிணற்றிலே உயிரிழந்தார். மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்த அருள்முருகனும் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து அருள்முருகன் மற்றும் அபிராமி இருவரின் உடல்களையும் சடலமாக மீட்டனர். கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வாழப்பாடி காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News