உத்தரபிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமர்ஜித் வர்மா என்பவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் மாலை மாற்றிக்கொள்ளும் போது அமர்ஜித் வர்மாவின் நண்பர்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மணமகன்-மணமகளின் குடும்பத்தினருக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது மணமகன் அமர்ஜித் வர்மா, மணமகளின் குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் வீட்டார் மணமகனை மரத்தில் கட்டிவைத்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணமகனை மீட்டு அவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறும் போது இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை சமரசம் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்ட மணமகனை மரத்தில் கட்டிவைத்த பெண் வீட்டார்#RajNewsTamil #UttarPradesh #viralvideo pic.twitter.com/MgmhhE1gPL
— Raj News Tamil (@rajnewstamil) June 16, 2023